தேனி மாவட்டம் பெரியகுளத்தில், தமிழக அரசு உத்தரவின்படி, இயற்கை மண்புழு உர விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரமும் மண்புழு உரமும் தயாரிக்கும் நிலையம் கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
பெரியகுளம் நகராட்சி சார்பாக மாதந்தோறும் 15 டன் உரம் தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அரசின் உத்தரவின் பேரில், வேளாண் துறையில் தரச்சான்று பெறப்பட்ட செழிப்பு இயற்கை உரம் என்ற பெயரில், பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் விதமாக பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் மண்புழு உர விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், பெரியகுளம் ஆணையாளர் கணேசன் மற்றும் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து, மண்புழு உரத்தினை விவசாயிகளுக்கு வழங்கினர்.