கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 50 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த கோர விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இரு ரயில்களும் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. தேசிய மீட்பு பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தாலும், இரவு நேரம் என்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளை செய்திட போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக், ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்ல தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து தகவல்களை அளிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தின் தொலைபேசி எண்கள்: 1070, 044-2859 3990 செல்போன் மற்றும் வாட்ஸ்அப் எண் 94458 69843
ரயில்வே துறையும் அவசரக் கட்டுப்பாட்டு எண்களை அறிவித்துள்ளது 044 – 25330952, 044-25330953, 044-25354771
ஒடிசா கட்டுப்பாட்டு அறை எண் 06782262286
Howrah – 03326382217
Kharagpur – 8972073925, 9332392339
Balasore – 8249591559, 7978418322
Shalimar – 9903370746
Vijayawada – 0866 2576924
Rajahmundry – 08832420541
Chennai – 044- 25330952, 044-25330953 & 044-25354771