ஒடிசா ரயில் விபத்துகள் போன்று அசம்பாவிதம் நடக்கும்போது முந்தை ஆட்சியை காங்கிரஸ் குறை சொன்னதில்லை என்றும், மாறாக அதற்கு பொறுப்பேறு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்றும் இளம் தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார். நியூயார்க் ஸ்டான்ட் போர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றிய ராகுல் காந்தி இதனை தெரிவித்தார்.
மேலும் ரயில் விபத்திற்கு முந்தைய காங்கிரஸ் காட்சி மேல் குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு ரயில்வே அமைச்சரை ராஜினாமா செய்ய பிரதமர் மோடி உத்தரவிடவேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள இளம் தலைவர் ராகுல்காந்தி, ரயில் விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற வலி நிறைந்த விபத்துக்களுக்கு பொறுப்பேற்பதிலிருந்து மோடி அரசு விலகிவிட முடியாது என்றும் இளம் தலைவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி செய்தபோது ஏற்பட்ட ரயில் விபத்துகளுக்கு முந்தைய பிரிட்டிஷ் காலத்தில் அமைத்த தண்டவாளங்கள்தான் காரணம் என குறை கூறவில்லை, விபத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர்கள் பதவி விலகி உள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.