கடலூரைச் சேர்ந்த பொறியாளர் சுபாஷ் தனது மனைக்காக கப்பலில் இருக்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு புது வீட்டை கப்பல் வடிவத்தில் கட்டிக் கொடுத்து அசத்தியுள்ளார்.
சுபாஷின் மனைவிக்கும் தன்னுடைய கணவர் போலவே தானும் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. மனைவியின் ஆசையை நிறைவேற்ற நினைத்த சுபாஷ், கப்பல் வடிவத்திலேயே வீடு ஒன்றை கட்ட முடிவு செய்தார்.
அதன்படி கடலூர் வண்ணாரபாளையம் பகுதியில் 4,000 சதுர அடியில் கப்பல் போன்ற வடிவமைப்பில் வீட்டினை கட்டத் தொடங்கினார்.
வீட்டை சுற்றி தண்ணீர் நிற்கும் வகையில், நூதனமான முறையில் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளார்.இந்த வீட்டிற்குள் சென்றவுடன் கப்பலில் இருப்பது போன்று படிக்கட்டுகளும், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் என தனித்தனியாக அறைகள் ஒதுக்கியும் நன்கு காற்றோட்டம் வீட்டிற்குள் வரும் விதமாகவும், கப்பல் கேப்டன் அமர்ந்து கப்பலை செலுத்தும் விதமாக இருப்பது போன்று ஒரு ஒரு அறை அமைத்து அதன் வழியாக வெளியிடங்களையும் பார்ப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளார்.
இது மட்டுமல்ல இரவு நேரங்களில் இந்த வீட்டினை பார்க்கும் பொழுது ஒரு கப்பல் தண்ணீரில் செல்வது போன்று தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும் மின்னொளிகளும் அமைத்து கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். இந்த பிரமாண்டமான வீட்டை பார்த்து அப்பகுதி மக்கள் மெய்சிலிர்த்து போய் நிற்கிறார்கள்.