ஈரோடு மாவட்டம், தொட்டிபாளையம் பகுதியில் காட்டு முயலை வேட்டையாடிய 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஈரோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பெருந்துறை அருகேயுள்ள தோரணாவி தொட்டிபாளையம் கிராமத்தில் உள்ள பட்டா நிலங்களில், மர்மநபர்கள் கும்பலாக காட்டு முயல்களை வேட்டையாடுவதாக, வன உயிரின கட்டுபாடு, கோவை மண்டல அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், வனச்சரக குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள பட்டா நிலங்களில் ஏராளமானோர் கும்பலாக காட்டு முயலை வேட்டையாடி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வனத்துறையினரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.
உடனடியாக வனத்துறை அதிகாரிகள் சுற்றிவலைத்து பிடித்தனர். இதில், மொத்தம் 107 பேர் பிடிபட்ட நிலையில், அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.