தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவக் கொலை மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை இன்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவன் கோகுல்ராஜ், தன்னுடன் படித்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி சுவாதியை காதலித்து வந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் ரெயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பட்டியலினத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், மாணவியை காதலித்ததை ஏற்றுக் கொள்ள முடியாத சங்ககரியை சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் அவரை கொலை செய்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் மீது ஆவணக் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர்கள் அருண்குமார் மற்றும் சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேர் குற்றவாளியாகவும், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார் தங்கரதுரை, சுரேஷ் ஆகிய 5 பேரை விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து யுவராஜ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் விதித்த தீர்ப்பில் யுவராஜூக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும், அருண், குமார், சதீஸ்குமார், ரகு, ரஞ்சித் சந்திரகேரன், செல்வராஜ், பிரபு, கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.