பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மல்யுத்த பயிற்சி சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பி யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர்கள் பல நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் போட முன்வந்தனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பதக்கங்கள் வீசும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு அளித்தும், பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தியும SFI, DYFI, உள்ளிட்ட அமைப்புகள் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர்.
இதில் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர்.