திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் மாடவீதியை சுற்றி சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
உலகப்பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் மாடவீதியை சுற்றி சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
இப்பணிகளை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார். 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவண்ணாமலை தேரடிவீதியில் கான்கீரிட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 5 கோடி ரூபாய் மதிப்பில் மின்சார துறையின் சார்பில் பணிகள் நடைபெற்றுள்ளது.
குடிநீர் இணைப்புக்காக 3 கோடியே 45 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான பைப்புகள் வாங்கும் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது. கார்த்திகை மாத தீபத்திருவிழாவுக்கு முன்னதாக கான்கிரீட் சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு ஆய்வின் போது அறிவுறுத்தினார்.