குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் நடந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் கூட்டப்புளி பகுதியை சேர்ந்த அருள்ராஜ்-சுபிஜா தம்பதிக்கு 3 வயதில் அஸ்வந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. உறவினர் வீட்டுக்கு அருள்ராஜ், மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது குழித்துறை கல்லுகட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பேருந்து அருள்ராஜின் மோட்டார் சைக்கிளில் பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த அருள்ராஜ் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.