மணிப்பூர் கலவரத்தை மோடி அரசு தடுக்கத் தவறிவிட்டதாக கூறி, மோடி அரசை கண்டித்து செங்குன்றம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை சார்பில் நடைப்பயணம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தை கண்டிக்கத் தவறிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் மோடி அரசை கண்டித்து நடைப்பயணம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆராய்ச்சி துறை மாநிலத் துணைத் தலைவர் வெள்ளிகுமார் தலைமை வகித்தார்.
செங்குன்றம் நகர தலைவர் கோபி, மாநில ஒருங்கிணைப்பாளர் நாகூர் மீரான், மாநில பொதுச் செயலாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்த நிலையில், தமிழ்நாடு ஆராய்ச்சித்துறை திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் மகிமை ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை மாநிலத் தலைவர் மாணிக்கவாசகம், திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் லயன்.டி.ரமேஷ், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை அலி அல் புகாரி, தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் குபேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.