கோவை மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஜூன் 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்குட்பட்ட பாசன நிலங்களுக்கு முதல்போக பாசனத்திற்காக 07.06.2023 முதல் 15.10.2023 முடிய தொடர்ந்து 130 நாட்களுக்கு ஆழியாறு அணையிலிருந்து 1205 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், ஆணை மலை வட்டத்திலுள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.