தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7ம் தேதிக்கு பதிலாக 12ம் தேதி திறப்பு என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜூன் ஐந்தாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் நேற்று வெப்பம் 18 இடங்களில் 100 டிகிரி ஃபேரன்ஷூட்டை தாண்டி பதிவாகியிருந்தது. இந்த நிலையில், வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், முதலமைச்சருடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த ஆலோசனைக்கு பின்னர் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதன்படி, தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதேபோல் புதுச்சேரியில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.