திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பொதுப்பணித்துறை கட்டட சார்பில் 12.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மக்கள் குறைதீர்வு கூட்டரங்கம் மற்றும் இதர அலுவலக கட்டடங்கள் அடங்கிய கட்டடம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அடிக்கல் நாட்டினார்.
12 கோடியே 17 லட்சத்து 94 ஆயிரத்து 738 ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள இந்த வளாகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்துவதற்கு வசதியாக 13 பேர் பயணிக்கக் கூடிய லிப்ட் வசதியுடன், 840 பேர் அமரும் வகையில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்ட அரங்கம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டுமானப் பணிகள் 15 மாதங்களில் முடிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.