காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான யோகா போட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட யோகா சங்கம், இந்திய தேசிய யோகா அமைப்பு சார்பில், தென்னிந்திய அளவில், யோகா போட்டிகள் நடத்தப்பட்டது.
காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற, யோகா போட்டியினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் தொடங்கி வைத்து, சர்வதேச அளவில் யோகா போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து 9 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு ஆசனங்களை செய்துகாண்பித்து திறமைகளை, வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.