நாகர்கோவிலில் நடைபெற்ற நாய் கண்காட்சியில், 45 வகையான உள்நாடு மற்றும் வெளி நாட்டை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.
குமரி கென்னர் கிளப் சார்பில், அகில இந்திய அளவிலா நாய் கண்காட்சி, நாகர்கோவிலில் உள்ள கிறிÞதுவ கல்லூரி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன.
இதில், வெளிநாட்டை சேர்ந்த லேப்ராடர், ராஜபாளையம், சிப்பிப்பாறை போன்ற 45 வகையான 300 நாய்கள் பங்கேற்றன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக அரியானா, டெல்லி, மும்பை, கோலாலம்பூர், கொல்கத்தா, ஐதராபாத் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து விமானம் மூலம் உயர்தர நாய்கள் வந்திருந்தன.