இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பெண் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுகன்யா. பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தயவு தாட்சனமின்றி கைது செய்து அதிரடி காட்டினார் சுகன்யா.
இந்நிலையில் சுகன்யாவுக்கு நேற்று விழுப்புரம் காவலர் பயிற்சி பள்ளிக்கு பணியிட மாற்றம் குறித்த அறிவிப்பு வந்தது. இதனால் அதிர்ச்சியான திடீர் பணியிட மாற்றத்திற்கான காரணத்தை உயரதிகாரியிடம் கேட்டபோது எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் இன்று காவல் நிலையத்திற்கு வந்த சுகன்யா அளவுக்கதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக காவலர்கள் சுகன்யாவை மீட்டு புதுவை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.