தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது ரேண்டம் எண்ணை www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வுக்கு கடந்த ஆண்டை விட இந்தாண்டு 18,174 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் ஆன்லைன் மூலம் 20ம் தேதி நடைபெறுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி முதல் ஆகஸ்ட் 24 வரை நடக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.