திருவொற்றியூரில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
யுத்த வர்ம போர்க்கலை அகடாமி விளையாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு சிலம்ப கழகம் சார்பில் சென்னை திருவொற்றியூரில் உள்ள பூந்தோட்ட பள்ளி மைதானத்தில் சிலம்பம் போட்டி நடைபெற்றது.
மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு வேல்கம்பு, வால்வீச்சு, சுருள் வாள்வீச்சு ஆகிய 5 வகையாக நடைபெற்ற போட்டியில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.