காரைக்காலில் மிஸ்டர் காரைக்கால் 2023 என்ற பெயரில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
காரைக்கால் கடற்கரை அரங்கில் மிஸ்டர் காரைக்கால் 2023 எனும் ஆணழகன் போட்டி நடைபெற்றது. புதுச்சேரி பாடி பில்டர்ஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற போட்டியில், பல்வேறு பகுதிகளில் உள்ள மையங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், புதுச்சேரியை சேர்ந்த தீபக் முதலிடம் பெற்று, மிஸ்டர் காரைக்கால் 2023 பட்டம் மற்றும் ரொக்க பரிசு 50 ஆயிரம் ரூபாயை வென்றார். மேலும், வெற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது