காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியின் 54 வது பிறந்தநாள் விழா வருகிற 17ம் தேதி இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
அதன் ஒரு பகுதியாக வருகிற 17ம் தேதி சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலை அருகில் 54 அடி உயர கொடிக் கம்பத்தில் காங்கிரஸ் கட்சிக் கொடி ஏற்றப்பட உள்ளது. இந்த நிகழ்வு இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக ராஜீவ் காந்தி சிலை அமைந்துள்ள பகுதியை புனரமைக்கவும், 54 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்கான அடிக்கல் நாட்டு விழா தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் முத்தழகன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணை தலைவர் ராமசுகந்தன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் துணைத் தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் பேசும்போது, இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக 54 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்கான கால்கோல விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் இப்பகுதியை புனரமைக்கும் பணியை தொடங்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.