திருவள்ளூர் , மீஞ்சூர் அருகே குண்டும் குழியுமாக மாறிய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நரிக்குறவர் இன கர்ப்பிணிப் பெண் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீஞ்சூர் முதல் திருவொற்றியூர் வரை உள்ள நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி அப்பகுதிகளில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியை சேர்ந்த அஜித் என்ற நரிக்குறவர் இனத்தை சேர்ந்த வாலிபர் தனது கர்ப்பிணி மனைவி ஐஸ்வர்யாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பட்டமந்திரி அருகே சென்று கொண்டிருந்த இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது லாரி ஒன்று பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஐஸ்வர்யா, கணவன் கண் முன்பாக உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அஜித்தின் 2 கால்களும் உடைந்த நிலையில் அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.