தீபாவளி சிறப்பு விற்பனையின் போது வசந்த் அன் கோ-வில் பொருட்கள் வாங்கி வாக்கிய போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர்கள் தமிழ்செல்வி வசந்த குமார் மற்றும் விஜய் வசந்த் ஆகியோர் தங்க நாணயம் பரிசாக வழங்கினர்.
தீபாவளி பண்டிகையின் போது வசந்த் அன் கோ கிளைகளில் பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்கள் வாக்கியப் போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள வசந்த் அன் கோ கிளையில் பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர் சாந்தி என்பவர் வாக்கிய போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தங்க நாணயத்தை வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர் விஜய் வசந்த் பரிசாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் வசந்த் அன் கோ கிளை மேலாளர் சந்திரமோகன், மற்றும் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரத்தின குமார், மேல்புரம் வட்டார தலைவர் ரவிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதே போல் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள வசந்த் அன் கோ கிளையில் தீபாவளி சிறப்பு விற்பனையின் போது பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர் வினோத் என்பவர் வாக்கிய போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டு அவருக்கான தங்க நாணயத்தை வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர் தமிழ் செல்வி வசந்தகுமார் வழங்கினார். பின்னர் வசந்த் அன் கோ நிறுவனத்தின் 46 வது ஆண்டு கொண்டடும் வகையில் கேக் வெட்டி வசந்த் அன் கோ ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் சோழிங்க நல்லூர் வசந்த் அன் கோ கிளை மேலாளர் ரவிந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.