கடலூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைப்பயிர்கள் அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் கேப்பர் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில விவசாயிகள் வாழைப்பயிரை பிரதானமாக விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது ராமாபுரம், வழி சோதனை பாளையம், ஒதியடி குப்பம், கீரப்பாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்நிலையில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பூவன், ஏலக்கி, மொந்தன், பேயன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.
ஏக்கருக்கு தலா ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்ட நிலையில், 10 நிமிட சூறைக்காற்றால் வாழை அடியோடு மரங்கள் சாய்ந்ததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.