ஆயிரக்கணக்கான மாணவர், பெற்றோர் அதிர்ச்சி
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் உள்ள தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாகவும், மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் +1,+2 வகுப்பில் பொறியியல், நெசவுத் தொழில்நுட்பம், விவசாயம் உட்பட பல தொழிற்பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 9 , 10 வகுப்புகளில் தொழில் பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, நடப்புகல்வியாண்டில் +1,+2 தொழில்கல்வி பாடப்பிரிவுகள் மூடவதற்கான வேலை தொடங்கி உள்ளது.
தென்காசி, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் கல்வி அலுவலர்கள் இதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.