நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டில் அதிவேகப் பயணம் காரணமாக 2,65,343 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதனால் 91,239 பேர் இறந்துள்ளனர்.
சாலையில் தவறான திசையில் பயணம் காரணமாக 20,228 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 7,332 பேர் இறந்துள்ளனர்.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதால் 8,355 விபத்துகள் ஏற்பட்டு, 3,322 பேர் இறந்துள்ளனர்.
மொபைல் போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியதால் 6,753 விபத்துகள் ஏற்பட்டு, 2,917 பேர் இறந்துள்ளனர்.
2020-ல் நடந்த சாலை விபத்துகளில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 69.3
சதவீதம் அதிவேகப் பயணத்தால்
ஏற்பட்டுள்ளது.