ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 45 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவிபட்டினம் மாரியம்மன் கோவில் வடக்கு பகுதியில் உள்ள அயூப்கான் என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 45 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்தி செல்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் அயூப்கானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு 3 லட்சம் ரூபாய் என்று தெரிகிறது.