பி.எஸ்.சி கம்யூனிகேஷன் ஹெல்த் படித்தவர்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Bsc கம்யூனிகேஷன் ஹெல்த் மருத்துவ பட்டம் பெற்றவர்களான மதுரையை சேர்ந்த பாலு உள்ளிட்டவர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில் நாங்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட Bsc கம்யூனிகேஷன் ஹெல்த் என்கிற மருத்துவ பட்டம் பெற்றுள்ளோம். எனவே எங்கள் பெயர்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு விண்ணப்பித்து இருந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சங்கம் நிராகரித்து விட்டது. எனவே மருத்துவ கவுன்சில் நிராகரித்த கோரிக்கையை ரத்து செய்து எங்களது பெயர்களையும் அச்சங்கத்தில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.