கூடுதல் நெரிசலை தவிர்க்கவும், வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு நாகர் கோயிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 5ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை சனிக்கிழமை தோறும் நாகர் கோயிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் புறப்படும். பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 11.40 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும்.
மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை ஞாயிறுதோறும் வேளாங்கண்ணியில் இருந்து நாகர்கோயிலுக்கு வாராந்திர சிறப்பு ரயில் புறப்படும். அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மாலை 4.45 மணிக்கு நாகர்கோயிலை வந்தடையும்.
இந்த ரயில்களில் பயணம் செய்ய ஜூன் 2ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
நாகர்கோவில்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, நீடாமங்கலம், திருவாரூர் நாகை நிலையங்களில் நின்று செல்லும்.