தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பாம்பு நுழைந்ததால் ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அலுவலகத்தில்,உதவியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். அப்போது அலுவலக வளாகத்தில் சுமார் மூன்றரை அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் வகையை சார்ந்த விஷப்பாம்பு ஒன்று உலவிக்கொண்டு இருந்தது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் பதுங்கி இருந்த விஷப்பம்பை பத்திரமாக பிடித்து அதனை மொரப்பூர் வனச்சரத்தில் விட்டனர்.