மேட்டுப்பாளையத்தில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் கம்பர் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் அதே பகுதியில் அடமானக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி பிரேமா தேவி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். பிரேமாதேவியின் பெற்றோர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரத்தில் வசித்து வருகின்றனர்.
கோடை விடுமுறை என்பதால் சஞ்சய்குமார், தனது மனைவி மற்றும் குழந்தைகளை மேட்டுப்பாளையத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மொட்டை மாடியில் பேரன், பேத்திகளுடன் தாத்தா பாபுபால் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் குழந்தை நிகாஷா மாடியில் இருந்த கம்பி மீது ஏற முயற்சி செய்து கால் இடறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி நிகாஷா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், விகாஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.