தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஊரக வளர்ச்சித் நிறுவனம் சார்பில், உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது.
பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம் சார்பில், நடைபெற்ற உலகப் புகையிலை எதிர்ப்பு தின பேரணி பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.
பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில் இருந்து தொடங்கிய இப்பேரணியை, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் 300க்கும் மேற்பட்ட வேளான்மை கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட நிலையில், புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், புகை பிடிக்காதே புன்னகை இழக்காதே என்ற வாசகத்தோடு கோஷமிட்டபடி நடந்து சென்றனர்.