தென்காசி அருகே கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் போலீசார் முன்னிலையில் மாறி மாறி தாக்கிக் கொண்ட கும்பலின் வீடியோ வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம், கோட்டைவாசல் கருப்பசாமி கோவிலுக்கு தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த சிலர் சாமி கும்பிடுவதற்காக வந்திருந்தனர். அதேபோல் தமிழக & கேரள எல்லை பகுதியை ஒட்டி அமைந்துள்ள தெற்கு மேடு என்கிற கிராமத்தில் இருந்தும் அக்கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்திருந்தனர்.
தூத்துக்குடியில் இருந்த வந்தவர்கள் தங்கள் காரில் சத்தமாக பாட்டு கேட்டபடி ஆட்டம் போட்டதால், சத்தத்தை குறைக்கும்படி தெற்கு மேடு பகுதி இளைஞர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது.
இதைத்தொடர்ந்து இருதரப்பினரும் அங்கிருந்த கடைகளில் இருந்து விறகுக்கடைகளை எடுத்து வந்து மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து போலீசார் சென்ற போது அவரை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்