ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுக்காவிற்குட்பட்ட சத்தி புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இவைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி இடம் மாறுவது உண்டு.
இந்நிலையில் இன்று கரளவாடி கிராமத்தில் இரண்டு காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகிலுள்ள தோட்த்திற்குள் புகுந்தது.
இதை கண்ட அப்பகுதி மக்களும், வனத்துறையினர் சேர்ந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போரட்டத்திற்கு பின் யானை வனப்பகுதிக்கள் சென்றதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.