வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறையில் உள்ள கிறிஸ்தவ மருத்துவமனையின் செவிலியர் கல்லூரிக்கு ஏ கிரேட் தரச்சான்று கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அக் கல்லூரியின் முதல்வர் வத்சலா சதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ள வத்சலா சதன், கிறிஸ்தவ மருத்துவமனையின் செவிலியர் கல்லூரி தேசிய அளவில் நல்ல மதிப்பையும் இடத்தையும் பெற்றுள்ளது என்றும் இக் கல்லூரியில் 884 செவிலியர் மாணவிகள் படித்து வருவதாகவும் தெரிவித்தார்.
செவிலியர் கல்லூரிக்கு மத்திய அரசின் NAAC ‘A’ கிரேட் அங்கிகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் இந்தக் கல்லூரியில் படித்த மாணவிகள் சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றுகின்றனர் என்று கூறினார். மேலும் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த விரைவில் பாகாயத்தில் செவிலியர் மாநாடு நடக்கவுள்ளது என்று கூறினார்