ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி கோயில் தரிசனத்திற்காக கொச்சுவேலியில் இருந்து ஜூலை 1ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில் அறிவித்துள்ளது.
ரவுண்ட் டிரிப்பாக செல்லும் இந்த பாரத் கவுரவ் ரயில் கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து ஜூலை 1ம் தேதி காலை 9 மணிக்கு புறப்பட்டு ஜூலை 6ம் தேதி காலை 11.45 மணிக்கு வந்தடையும்.
மறுமார்க்கத்தில் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி காத்ரா நிலையத்தில் இருந்து ஜூலை 7ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்படும் பாரத் கவுரவ் ரயில், கொச்சுவேலிக்கு ஜூலை 12ம் தேதி இரவு 11.15 மணிக்கு கொச்சுவேலியை வந்தடையும்.
இந்த ரயில் நாகர்கோயில், நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், விஜயவாடா, ஐதராபாத், நாக்பூர், போபால், ஆக்ரா, ஜம்மு நிலையங்கள் வழியாக செல்லும்.