செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மேஜர் ஆகாத பெண்ணுக்கு திருமணம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலில் போலீசார் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த இளைஞருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞரின் உறவுக்கார பெண்ணுக்கும், திருமணம் செய்துவைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதை யடுத்து திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்தகுளம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே மேற்கண்ட திருமண மண்டபத்தில் 18 வயது பூர்த்தி அடையாத பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணமக்களின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி அதை உறதி செய்தனர். பின்னர் போலீஸ் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி இரு வீட்டாரையும் எச்சரித்து அனுப்பினர். இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.