நாடு முழுவதும் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் முருகன், தென்னை விவசாயிகள் சங்க மாநில செயலாளர் விஜயமுருகன் ஆகியோர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரை சந்தித்து மனு அளித்தனர்.
இதில் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு கட்டுப்படியாகும் விலையை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும், 2022 மின்சார மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிர் நீத்த 712 விவசாய குடும்பங்களுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.