சமூகவலைதளங்களில் பொய்செய்திகளை வெளியிடும் எதிரணியினரை முறியடிக்க திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக துணை பொது செயலாளரும், எம்பி.,யுமான கனிமொழி நாகர்கோவிலில் திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை ஓராண்டுக்கு தி.மு.க. மற்றும் அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது என்றும் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.