மதுரை மாநகராட்சி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக 2,752 தூய்மைப் பணியாளர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி தொடங்கி 2024ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை ஓராண்டுக்கு இந்த விழாவை நடத்த வேண்டும் என்று கட்சியின் நிர்வாகிகளுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது
இந்நிலையில் மதுரை மாநகராட்சி சார்பிலும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் 2,752 தூய்மை பணியாளர்களைக் கொண்டு கருணாநிதியின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டது.
சாதி,மத, இன, ஏற்றத் தாழ்வெனும் குப்பைகளை களைந்து, நல் சமூகம் படைத்த கலைஞரின் உருவத்தில், தூய்மைப்பணியாளர்கள் அணிவகுத்து நின்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அதாவது அனைத்து தூய்மைப் பணியாளர்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் 20 நிமிடத்தில் கலைஞரின் உருவம் போல் அணிவகுத்த நிகழ்வை பார்வையிட்ட டிரம்ப் புத்தக நடுவர்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான சான்றிதழையும் வழங்கினர்.
இச் சான்றிதழை தமிழ்நாடு தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார், வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.