சிவகங்கை மாவட்டம் நைனார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ வீரய்யா கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக யாகசாலையில் பட்டமங்கலம் தண்டாயுதபாணி குருக்கள் தலைமையில் பல்வேறு யாகங்களும் பூஜைகளும் நடத்தப்பட்டது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் தண்ணீர் ஊற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள நரியனேந்தல் கிராமத்தில் ஸ்ரீ முத்தையா சுவாமி கோயில் குலதெய்வ வழிபாட்டுக்காக பெருமாள்பட்டி, இலுப்பைகுடி, போன்ற கிராமங்களில் இருந்து உறவினர்கள் ஒன்று கூடியுள்ளார்கள். அதன்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி களரியை முன்னிட்டு 100 கிடாக்களுடன் உறவினர்கள் வந்து சேர்ந்தனர்.
விழாவின் இறுதி நாளில் சுமார் 700க்கும் மேறபட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு அசைவ விருந்து நடப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.