வந்தவாசியில் 8 கிராமங்களை நகராட்சியில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை இட்டனர்.
வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரமாக உள்ளது நகரத்தைப் பொருத்தவரை பரப்பளவு மிகவும் குறைவாகவே உள்ளன.
மேற்குப் பகுதியில் பழைய பஸ் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அம்மையப்பட்டு, மும்முனி ஆகிய கிராமங்கள் தனி ஊராட்சிகளாக செயல்படுகின்றது. அதேபோல் வடக்கு பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதிரி,வெண்குன்றம் கிராமங்களும், கிழக்கு பகுதியில் உள்ளசென்னாவரம் ஆகிய கிராமங்கள் தனி ஊராட்சியாக செயல்படுகிறது.3 கிலோமீட்டர் தூரமுள்ள கீழ்சாத்தமங்கலம்,செம்பூர், பிருதூர்,மாம்பட்டு ஆகிய கிராமங்கள் தனி ஊராட்சி மன்றங்களாக செயல்படுகின்றன.
நகரத்தில் வீட்டுமனைகளை வாங்க முடியாத நிலையில் நகரத்தை யொட்டியுள்ள கீழ் சாத்தமங்கலம் ஊராட்சி பகுதியில் உள்ள சத்யா நகர்,கம்பன் நகர்,நடேசன் நகர், தேனருவி நகர், ஆசிரியர் நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகரத்தை விட அதிக விலைக்கு கொடுத்து தங்களுக்கு தேவையான வீட்டுமனைகளை வாங்கு கின்றனர். இதனால் நகரத்தை காட்டிலும் மேற்கண்ட பகுதிகளில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான விலைக்கே கிராம எல்லையில் விற்பனையாகின்றது
அதேபோல் சென்னாவரம் கிராமத்திலும் வீட்டுமனைகள் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் தான் விற்பனை செய்யப்படுகிறது. இதனை அரசு ஆய்வு மேற்கொண்டதில் அருகில் உள்ள கிராமங்களை நகராட்சியில் இணைத்து கூடுதல் வருவாயை பெருக்க முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான அரசாணை சென்னாவரம், மும்முனி, அமையப்பட்டு, வெண்குன்றம், பாதிரி, செம்பூர், மாம்பட்டு, கீழ்சாத்தமங்கலம் ஆகிய கிராமங்களை இணைக்க முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்தி 6 மாதத்திற்குள்ளாக முடிவுகளை அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மேற்கண்ரரட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கடித்தை மாவட்ட
நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அண்ணாதுரை 8 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் அனுப்பினார். இந்த கடிதம் கண்ட 6 மாதத்திற்குள் தங்களது ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட் டுள்ளார்
இந்த உத்தரவினை கண்டு தற்போது ஊராட்சி மன்ற தலைவர்களாக உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் என்பது தனி அதிகாரம் கொண்டது. காசேலைகளை கையாலும் அதிகாரம் கொண்ட பதவி ஆனால் நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் மேற்கண்ட கிராமங்களில் இருந்து கவுன்சிலர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதால் யானைக்கு வாலாக இருப்பதை காட்டிலும் தவளைக்கு தலையாக இருக்கவே தற்பொழுது உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் கருதுகின்றனர்.
இதையொட்டி,வந்தவாசி நகராட்சியுடன் 8 ஊராட்சிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 6 ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராமமக்கள் 200 க்கும் மேற்பட்டோர் பிடிஓ அலுவலகத்தில் கூடினர். பின்பு 6 ஊராட்சி மன்ற தலைவர்கள் பிடிஓ அலுவலகத்தில் மனு அளித்தனர்.