சென்னை தாம்பரத்தில் வணிகரிடம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியில் ராஜன் என்பவர் சூப்பர் மார்கெட் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்ற தொழிலாளர் துறையின் உதவி ஆய்வாளர் பொன்னிவளவன் தொழிலாளர்கள் மீது பல்வேறு குறைகளை கூறியுள்ளார். மேலும் 50 ஆயிரம் பணம் தருமாறு கடை உரிமையாளரான ராஜனை மிரட்டியதாக கூறப்படுகிறது.
பணம் பறிக்கும் நோக்கில் குறைகளை கூறி லஞ்சம் கேட்ட பொன்னிவளவன் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் ராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தனுப்பினர். பொன்னிவளவன் பணத்தை ராஜனிடம் வாங்கிய போது அவரை கையும் களவுமாக லஞ்சஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.