விபத்தில் சிக்கியவர்களின் உயிர்களை காப்பாற்றுவேத தனது லட்சியம் என நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவர் பிரபஞ்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 20 லட்சத்து 87 ஆயிரம் மாணவர்களும், தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரம் மாணவர்களும் நீட் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 78 ஆயிரத்து 693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்
இதில் சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் படித்த மாணவர் பிரபஞ்சன் 720/720 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பின்னர் வசந்த் தொலைக்காட்சிக்கு மாணவர் பிரபஞ்சன் அளித்த பேட்டியில், நீட் தேர்வில் முதலிடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை, அதற்கு கடவுள், ஆசிரியர், பெற்றோர்தான் காரணம் என தெரிவித்தார்.
மேலும் மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சை நிபுணராகி, விபத்தில் சிக்கியவர்களின் உயிர்களை காப்பாற்றுவதே தனது லட்சியம் என தெரிவித்தார்.