சென்னை பல்லாவரத்தில் 70 வருட பழமையான கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன.
சென்னை பல்லாவரம் அடுத்த இந்திரா நகரில் 70 வருடத்திற்கும் மேல் பழமையான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பம்மல் பிரதான சாலையில் உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழே அடகு கடை மற்றும் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை திடிரென கட்டிடத்தின் முன் பக்க பகுதி இடிந்து விழுந்தன. அப்போது கட்டிடத்தில் கீழே இருந்த பழைய இருசக்கர வாகனங்கள் முற்றிலும் சேதம் அடைந்தனர். நல்வாய்ப்பாக அங்கு யாரும் நிற்கவில்லை எனப்தால் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள் இடிபாடுகளை அகற்றி வாகனங்களை மீட்க உதவினர். இது குறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.