திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் காவல் சரகத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 129 சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகரை குற்றங்களற்ற நகரமாக்கும் நோக்கில் காவல்துறையின் மூன்றாவது கண் என்றழைக்கப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து, குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நிகழ்ந்த குற்றங்களில் உண்மை சம்பவங்களை அறிந்து குற்றவாளிகளை கைது செய்யவும் பெரிதும் உதவுகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஜூன் 24ம் தேதி எழும்பூர், காவல் உயரதிகாரிகள் நட்பகம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் காவல் சரகத்தில் 43 இடங்களில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 129 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.
பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் எழும்பூர், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள இந்த கேமராக்கள் இணையதளத்துடன் இணைக்கப்பட்டு, வீடியோ பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கேமராக்கள் இயங்கவில்லை என்றாலோ, யாரேனும் சேதப்படுத்தினாலோ, தானியங்கி மூலம் இ-மெயில் முகவரிக்கு எச்சரிக்கை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது,