நாகை மாவட்டத்தில் நடைபெற்ற, போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில், காவல்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணியில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடலோர பாதுகாப்பு குழும காவல் துறை சார்பில் நடைபெற்ற பேரணியை, மாவட்ட காவல் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயசங்கர் மற்றும் பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
அப்போது மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகளை குறித்தும், போதைக்கு அடிமையாகக்கூடாது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. பேரணியில், மாணவர்கள், காவல்துறையினர், தன்னார்வலர்கள், புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டு, கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.