தஞ்சை மாவட்டத்தில் உள்ள உப்பிலியப்பன் கோவில் வேங்கடாஜலாபதி ஆலயத்தில், குடமுழுக்கு விழாவை ஒட்டி ராஜகோபுரம் மின்னொளியில் காட்சியளிக்கிறது.
தமிழகத்தின் திருப்பதி என அழைக்கப்படும் கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் கோவில் வேங்கடாஜலபதி ஆலயத்தில், வரும் 29-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, திருவிடைமருதூர் டிஎஸ்பி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சுமார் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடமுழுக்கு விழாவிற்கு சில நாட்களே உள்ள நிலையில் ராஜகோபுரம் மற்றும் தீர்த்த குளங்கள் மின்னொளியில் காட்சி அளிக்கின்றன.