கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் உறுதி தன்மையை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் தலைமையில் ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளில் உள்ள, கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை அடுத்து, அப்பகுதியில் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றன. இதனை அடுத்து, சாலைகளின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் தலைமையில் அதிகாரிகளும் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சாலைகளின் தன்மையை உறுதி செய்ய ஆய்வு செய்ய வந்த டாக்டர் செல்லக்குமாருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.