குமரி மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, வேளாங்கண்ணி ரயில் புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என, தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்தார்.
வேளாங்கண்ணி செல்ல புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பண்டிகை கால சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என கேட்டு கொண்ட விஜய் வசந்த், குமரி மாவட்டத்தில் கொரோனா காலத்துக்கு முன்பு இருந்ததை போல, மதுரை புனலூர் ரயில், ஆரல்வாய் மொழி, பள்ளிப்பாடி, குழித்துறை மேற்கு போன்ற ரயில் நிலையங்களில் நிறுத்தம் வேண்டும என கேட்டு கொண்டார்.
இதேபோல், நாகர்கோவில் கோட்டயம் ரயில், நாகர்கோவில் டவுன், பள்ளியாடி, குழித்துறை மேற்கு ஆகிய இடங்களில் நின்று செல்ல, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்ட விஜய் வசந்த், புதிதாக அறிமுகமாக உள்ள சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலை, குமரி மாவட்டம் வரை நீட்டிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.