பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷனுக்கு எதிராக இனி தெருவில் போராட்டம் நடத்தபோவதில்லை என தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள், சட்டப்படியே இதை சந்திப்போம் அறிவித்துள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர் பாலியல் புகார் கூறி இருந்தனர். இதுதொடர்பாக டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தாலும் இதுவரை அவர் கைது செய்யவில்லை.
ஆனாலும் பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மத்திய அமைச்சருடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக இனி தெருவில் போராட்டத்தில் ஈடுபட போவதில்லை என்றும், அதே நேரத்தில் சட்டப்படியே இதை சந்திக்க உள்ளதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.